மதுரையில் மீண்டும் திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்ட தேதி மாற்றம் : 2வது முறையாக வெளியான அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2023, 4:57 pm

மதுரையில் மீண்டும் திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்ட தேதி மாற்றம் : 2வது முறையாக வெளியான அறிவிப்பு!!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்று நேற்று மதுரை தவிர மற்ற அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக திமுகவின் உண்ணாவிரதம் போராட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

அதன்படி, திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நேற்று மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றதால், அங்கு மட்டும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் தேதி மாற்றப்பட்டது.

அந்தவகையில், நாளை மறுநாள் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது. இந்த நிலையில், மதுரையில் ஆகஸ்ட் 23ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் 24ம் தேதிக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் மதுரை அண்ணாநகர் அம்பிகா திரையரங்கு அருகே நடைபெறும் என ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட திமுக அறிவித்துள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி