மாமியார் கண்முன்னே மருமகள் செய்த காரியம்.. கள்ளக்காதலன் போலீசில் சரணடைந்ததன் பின்னணி என்ன?

Author: Hariharasudhan
14 December 2024, 3:14 pm

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாக மாமியாரை, தனது தோழி மற்றும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜசேகர் (42) – அமுல் (38) தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜசேகரின் தாய் லட்சுமியும் (58) இவர்கள் உடன் வசித்து வந்தார். ராஜசேகர் சொந்தமாக நெல் அறுவடை எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார்.

எனவே, பணி நிமித்தமாக அவர் அடிக்கடி வெளி மாநிலங்களுக்குச் சென்று மாதக் கணக்கில் தங்கி விட்டு வருவதை வழக்கமாக வைத்து உள்ளார். இந்த நிலையில், மனைவி அமுலுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறி, ராஐசேகர் வீட்டில் இல்லாத நேரத்தில் அமுல் வீட்டுக்கு வந்து செல்வதையும் ,அவருடன் நெருக்கமாக பழகும் நிலைக்கு வந்து உள்ளது. இதனை மாமியார் லட்சுமி கவனித்து உள்ளார். இதனால், அமுலை அமுலை அவர் பலமுறை கண்டித்து உள்ளார்.

இவ்வாறு கண்டிக்கும்போதெல்லாம், மாமியார், மருமகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்து உள்ளது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 10ஆம் தேதி, லட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் அளித்து உள்ளனர்.

Daughter in law killed mother in law  in chengalpattu 3 arrested

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லட்சுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவில், லட்சுமியின் கழுத்தை நெரித்து தற்கொலை செய்ய வைத்திருக்கலாம் என்றும், லட்சுமியின் உடலில் காயங்கள் மற்றும் கைரேகைகள் உள்ளதாகவும் தெரிய வந்து உள்ளது.

இதனை வைத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்து உள்ளனர். அப்போது அமுலுக்கும், சரவணனுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது போலீசாருக்கு தெரிய வந்து உள்ளது. இந்த நிலையில், நேற்று காலை நெரும்பூர் கிராம நிர்வாக அலுவலர் மகேஷை அமுல், அவரது தோழி பாரதி, சரவணன் ஆகியோர் சந்தித்து உள்ளனர்.

இதையும் படிங்க: கொண்டாட்டத்தில் கணவர்…திண்டாட்டத்தில் மனைவி…ஊரை காலி பண்ண சூப்பர் நடிகை முடிவு…!

பின்னர், தாங்கள் 3 பேரும் சேர்ந்து தான் திருமணத்தை மீறிய உறவைக் கண்டித்ததால் லட்சுமியை அடித்துக் கொலை செய்து தற்கொலை கொண்டது போல் ஜோடித்தோம் எனக் கூறியுள்ளனர். பின்னர், இது குறித்து விஏஓ மகேஷ், திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

இதன் பேரில் நேரில் சென்ற போலீசார், அங்கு இருந்த 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!