கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த, மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலங்கையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வேல்முருகன்.
இவர் விருத்தாச்சலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, பூமாலை என்பவரின் மகள் கீதா-33 என்பவரை 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கீதாவுக்கு விருத்தாச்சலத்தில் உள்ள புதுகுப்பம் பகுதியை சேர்ந்த, வெங்கடேசன் என்பவரின் மகன் ஹரிஹரன் என்பவருடன், கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கள்ளத் தொடர்பு பற்றி, கீதாவின் மாமியார் கொளஞ்சி மற்றும் மாமனார் சுப்பிரமணியனுக்கும் தெரிய வந்ததால், மருமகள் கீதாவை கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கீதா கடந்த 29.12.2021 ஆம் தேதி, தனது கணவரின் சொந்த ஊரான இலங்கியனூர் ஊருக்கு சென்று, கணவர் வேல்முருகன் மற்றும் மாமியார் கொளஞ்சி மாமனார் சுப்பிரமணியன் ஆகியோருக்கு முள்ளங்கி சாம்பாரில்,எலி பேஸ்ட் விஷத்தினை கலந்து கொடுத்துள்ளார்.
அப்போது விஷ சாம்பாரை சாப்பிட்ட மாமியார் கொளஞ்சி, மாமனார் சுப்பிரமணியன், பக்கத்து வீட்டு பையன் பிரபு என்பவரின் 10 வயது மகன், நித்தீஸ்வரன் ஆகிய மூவருக்கும் அடுத்தடுத்து உடல் நலவு குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி, அடுத்தடுத்து மூவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆறாம் தேதி, கீதாவின் கணவர் வேல்முருகன், மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் வழக்கு பதிந்த மங்கலம்பேட்டை காவல் துறையினர், எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வந்த நிலையில், 1 1/2 வருடம் கழித்து, சாம்பாரில் விஷம் வைத்து, மாமியார், மாமனார் மற்றும் பக்கத்து வீட்டு பையனை கொன்ற கீதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஹரிஹரனை இன்று காலை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
நிர்வாக திறனற்ற திமுக அரசின் கையாலாகாத காவல்துறை, சிறுவன் உட்பட, மூன்று நபரை, விஷம் வைத்துக் கொன்ற ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியின் மகளை, 1 1/2 வருடம் கழித்து கைது செய்து இருப்பது என்பது, காவல்துறையின் அலட்சியப்போக்கை வெட்ட வெளிச்சமாக காட்டுவதாக, பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.