அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகள் உயிரிழப்பு… மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2024, 9:57 am

அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகள் உயிரிழப்பு… மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன். இவரது மகன் சசிமோகன், இவர் காரிமங்கலம் கெரகோட அள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.

இவரது மனைவி பூர்ணிமா வயது 30‌ , கடந்த 18 ஆம்தேதி அன்று வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீரென பூர்ணிமா மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் அவர் அணிந்திருந்த ஆடை மீது, பூஜை அறையில் இருந்த விளக்கில் இருந்து தீப்பற்றிக்கொண்டது. இதை பார்த்து அதிர்ச் சியடைந்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டனர்.

பின்னர், தீக்காயம் அடைந்த அவரை காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து அங்கு அவருக்கு கடந்த 8 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றி இன்று உயிரிழந்தார்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…