‘எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க ப்ளீஸ்’: காதல் திருமணம் செய்த அமைச்சர் சேகர் பாபுவின் மகள் கர்நாடகா போலீசிடம் தஞ்சம்..!!

Author: Rajesh
8 March 2022, 7:15 pm

பெங்களூர்: காதல் திருமணம் செய்து கொண்ட அமைச்சர் சேகர் பாபுவின் மகள் தந்தையிடம் இருந்து பாதுகாக்க கோரி போலீஸ் நிலையத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான பி.கே.சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி, தனக்கும் தனது கணவர் சதீஷ்குமாருக்கும் பாதுகாப்பு கோரி காவல்துறையை அணுகியுள்ளார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் திங்கள்கிழமை தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரை அணுகினார்.

அவர் போலீஸ் கமிஷனர் கமல் பந்த்திடம் ஒரு மனு கொடுத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரின் மகள் ஜெயகல்யாணி, தான் சதீஷ்குமாரை கடந்த 6 ஆண்டுகளாக காதலிப்பதாகவும் தனது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார்.

சதீஷ்குமார் மீதான எனது காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் அவரை திருமணம் செய்ய முயன்றபோது, ​​போலீசார் அவரை கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்து இரண்டு மாதங்கள் காவலில் வைத்திருந்தனர் என்று அவர் கூறினார். இதற்கு பின்னால் என் தந்தையின் பங்கு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன்.

நான் 18 வயதுக்கு மேல் உள்ள பெண். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என்று ஜெயகல்யாணி கூறினார். மேலும், தமிழகம் திரும்பினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், எனவே பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரை அணுகியுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் தனக்கு யாரும் உதவ மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 1347

    0

    0