ரத்தக்கறையோடு ஆற்றில் மிதந்து வந்த சடலங்கள்.. ஒரு பக்கம் தாய்.. மறுபக்கம் மகன் : பகீர் கிளப்பிய சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2024, 9:51 pm

ரத்தக்கறையோடு ஆற்றில் மிதந்து வந்த சடலங்கள்.. ஒரு பக்கம் தாய்.. மறுபக்கம் மகன் : பகீர் கிளப்பிய சம்பவம்!

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த தொட்டம்பட்டி கிராமத்தின் அருகே தூக்கிட்ட நிலையில் சுமார் 46 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத பெண்ணும், சுமார் 22 வயது மதிக்க தக்க ஆணும், ஆற்று நீரில் சட்டலமா இருப்பதாக மொரப்பூர் காவல் நிலையத்திற்கு தொட்டம்பட்டி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் மொரப்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இருவரும் தாய், மகன் என்று காவல்துறையினரால் சொல்லப்படுகிறது. மேலும், இவர்கள் இருவரும் மாற்று திறனாளிகள் என்பதும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

தூக்கில் தொங்கிய படி தாயும், தலை மற்றும் முகத்தில் ரத்த வெள்ளத்துடன் மகனுக்கும் மர்மமான முறையில் இறந்து கிட்டந்துள்ளனர். இவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை.

இறந்தவர்களின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து தாய் மற்றும் மகனை கொலை செய்து ஆற்றில் வீசி சென்றார்களா, அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரின் இறப்பு இப்பகுதி மக்களிடயே பெரும் பயத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

  • Maharaja movie box office in China பிரமாண்டத்தை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி.. சீன பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் VJS!
  • Views: - 483

    0

    0