மேட்டுப்பாளையம் அருகே இரு வேறு இடங்களில் பவானி ஆற்றில் குளிக்க சென்ற 3 பெண்கள் உட்பட ஐந்து பேர் மாயமான நிலையில் 5 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இதில் கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஜீவானந்தம்(வயது16). இவரது நண்பர் உப்பிலிபாளையத்தை சேர்ந்த கவுதம்(16) ஆகியோர் உடல் 3 நாட்களுக்கு பின் இன்று காலை மீட்கப்பட்டது.
தொடர்ந்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி பலர் உயிரிழந்து வருகின்றனர். பலர் ஆற்றில் சுழல் இருப்பது தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக தங்களது உயிரை இழந்து வருகின்றனர்.
மேலும் ஆற்றில் ஆழத்தன்மை குறித்து தெரியாமல் இங்கு வரும் சிலர் மது அருந்திவிட்டுற இளைஞர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அப்போது,பில்லூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது தெரியாமல் வெள்ள நீரில் சிக்கி பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மட்டும் பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற 11 பேரில் மூன்று பெண்கள்,இரு ஐடிஐ மாணவர்கள் உட்பட ஐந்து பேர் ஒரே நாளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்
எனவே பவானி ஆற்றில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் லைஃப் கார்ட்ஸ் திட்டம் தொடங்கபட்டுள்ளது.
கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இந்த லைப் கார்ட்ஸ் புதிய திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்திற்காக மேட்டுப்பாளையம் காவல்துறையில் ஒரு எஸ்ஐ மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி பெற்ற 10 காவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது 24 மணி நேரமும் பவானி ஆற்றங்கரையோரம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும்.
மேலும், இந்த குழுவினர் பவானி ஆறு குறித்தும் வெள்ளப்பெருக்கு குறித்தும், வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்து வரும் மக்கள் குறித்தும், பவானி ஆற்றங்கரையில் உள்ள தேக்கம்பட்டி, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, வச்சிம்பாளையம், லிங்காபுரம், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த உள்ளனர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே கலந்தாய்வு கூட்டமானது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் டிஎஸ்பி பாலாஜி,மற்றும் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டு இந்த திட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனைகளையும், தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில் லைப் கார்டு குழுவில் உள்ள 11 பேரும்,24 மணி நேரமும் லைப் ஜாக்கெட்,கயிறுகள்,ஹெட் லைட்,டார்ச் லைட் உள்ளிட்ட பல்வேறு உயிர் காக்கும் கருவிகளுடன் தயார் நிலையில் இருப்பர்.
பவானியாற்றில் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து இந்த குழுவிற்கு பொதுமக்கள் 24 மணி நேரமும் அழைக்கலாம் எனவும், அவசர உதவி எண்கள் மேட்டுப்பாளையம் டி எஸ் பி 866 73 73 105 , மேட்டுப்பாளையம் காவல் நிலையம் 94 981 0 1186 .
இந்த எண்களை பவானி ஆற்றில் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து அவசர உதவி என்றால் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை தலைப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.