4 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் : தேதியுடன் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan9 December 2023, 8:01 pm
4 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் : தேதியுடன் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!
மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்களுக்கும் பொருந்தும் என மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்களுக்கும் பொருந்தும்.
அபராத தொகை இல்லாமல் வரும் 18ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மின் கட்டண கால அவகாசம் நிறுவனங்களுகு்கும் பொருந்தும் என மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.