மட்டன் கடை முன்பு புதைத்த சடலத்தை வீசிய நபரால் பரபரப்பு.. தேனியில் நடந்தது என்ன?

Author: Hariharasudhan
10 February 2025, 11:43 am

தேனியில், பணம் கேட்டு மிரட்டி, புதைத்த சடலத்தை தோண்டி எடுத்து வந்து மட்டன் கடை முன்பு வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி: தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணியரசன். இவர் பல ஆண்டுகளாக ஆடு, கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும், இதே பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் எந்த வேலையும் செய்யாமல், அந்தப் பகுதியில் உள்ள கடைக்காரர்களை மிரட்டி பணம் வாங்குவது, கடையில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை மணியரசன் நடத்தும் மட்டன் கடைக்கு குமார் வந்துள்ளார். தொடர்ந்து அவர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால், மணியரசன் பணம் தர முடியாது என கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் பணம் தராவிட்டால் மலத்தை கரைத்து கடையில் ஊற்றுவேன் என்றும், பிணத்தை எடுத்து வந்து கடை முன் போடுவேன் எனவும் குமார் மிரட்டி உள்ளார்.

Man thrown death body in front of Mutton stall in Theni

இதனால் பயந்துபோன மணியரசன், ஒரு கிலோ ஆட்டின் குடலை குமாருக்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து, மட்டன் மற்றும் பணம் கேட்டால் குடல் தருகிறாயா? எனக் கேட்டு ஆவேசம் அடைந்த குமார், குடலை கடை முன் வீசி எரிந்து விட்டு வேகமாகச் சென்றுள்ளார். இதனையடுத்து, சிறிது நேரம் கழித்து பழனிசெட்டிபட்டி சுடுகாட்டிற்குச் சென்ற குமார், அங்கு புதைக்கப்பட்டிருந்த சடலத்தை தோண்டி, தலையில் சுமந்தபடி தெருக்கள் வழியாக வந்து, மணியரசன் கடை முன்பாக அந்த சடலத்தை வீசி எறிந்துள்ளார்.

இதையும் படிங்க: குரங்கால் மின் தடையா? நாடே இருளில் மூழ்கியதால் அதிர்ச்சி.. எதிர்கட்சிகள் கடும் கண்டனம்!

மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், கறி வாங்க மக்கள் கூட்டம் அதிகளவு வந்த நிலையில், சடலத்தை பார்த்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் இது குறித்து அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆம்புலன்ஸ் உதவியுடன் சடலத்தை மீட்டு மீண்டும் சுடுகாட்டில் புதைக்க ஏற்பாடு செய்தனர்.

மேலும், குமாரை கைது செய்த போலீசார், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Simbu Nayanthara Vallavan shooting incident நயன்தாரா-சிம்பு செய்த காரியம்…போனை பார்த்ததும் தயாரிப்பாளர் ஷாக்..!
  • Leave a Reply