இறப்பதற்கு 9 வருடங்களுக்கு முன்னரே மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ் : சர்ச்சையில் சிக்கிய கோவை மாநகராட்சி…!!
Author: Udayachandran RadhaKrishnan31 மே 2022, 10:57 மணி
கோவை மாநகராட்சியின் அலட்சியத்தால் இறப்பதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னரே இறப்பு சான்றிதழ் வழங்கிய கொடுமை நிகழ்ந்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கோவைக்கு பணிக்கு செல்வோர், கல்லூரி, பள்ளி கல்லூரிக்கு செல்வோர் என தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையம் வந்த ரயிலில் பயணி ஒருவர் இறப்பு சான்றிதழ் ஒன்றினை மறந்து விட்டு சென்றுள்ளார். அதனை கண்டெடுத்த மற்றொரு பயணி ஒருவர் சான்றிதழை மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேனேஜர் பிரசன்னாவிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து வாட்ஸ் ஆப் குழுக்களில் தகவல் அனுப்பியதன் மூலம் சான்றிதழுக்கு உரியவர் ரயில் நிலையம் வந்து பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவிட்ட சான்றிதழ் தான் பெரும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
சான்றிதழில் மூதாட்டியின் பெயர் ரங்கம்மாள் எனவும், இறந்த தேதி 18-05-1999 என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும்,சான்றிதழ் வழங்கிய தேதி 09-06-1990 என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது மூதாட்டி இறப்பதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னரே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே இந்த தவறு நிகழ்ந்துள்ளது. இந்த சான்றிதழ் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
0
0