ஒரே நொடியில் மரணம்… வாகன ஓட்டியின் உயிரை பறித்த பசு : பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2022, 2:20 pm

விழுப்புரம் மாவட்டம் சின்னகோட்டகுப்பம் ஈ.சி.ஆர் சாலையில் பைக்கில் வந்த தனியார் மருத்துவமனை காவலாளி மாட்டின் மீது மோதி உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சின்ன கோட்டக்குப்பம் சமரசம் நகர் சுனாமி குடியிருப்பை வசித்து வந்தவர் முஹம்மது சுலைமான் (44), தனியார் மருத்துவமனை காவலாளியாக வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் முஹம்மது சுலைமான் நேற்று இரவு வீட்டிலிருந்து பைக்கில்
மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சின்ன கோட்டக்குப்பம் புதுச்சேரி- சென்னை ஈ.சி.ஆர் சாலையில் சென்றபோது சாலையில் குறுக்கே வந்த மாடு மீது சுலைமான் வாகனம் மோதியது.

இதில் சுலைமான் தூக்கி வீசப்பட்டு சாலை ஓரத்தில் இருந்த வாய்க்காலில் விழுந்தார். அவரை வீட்டு பக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

https://vimeo.com/765198332

இதுகுறித்து, கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Ilaiyaraja Talk About Yuvanshankar raja யுவன்சங்கர் ராஜாவை மேடையில் பங்கம் செய்த இளையராஜா.. ராஜா ராஜாதான் யா..!!