பங்காரு அடிகளார் மறைவு… மேல்மருவத்தூர் பீடத்திற்கு படையெடுத்த பக்தர்கள் : வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2023, 10:02 pm

பங்காரு அடிகளார் மறைவு… மேல்மருவத்தூர் பீடத்திற்கு படையெடுத்த பக்தர்கள் : வீடியோ!!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே முன்னாள் ஆசிரியர் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1966ஆம் ஆண்டு துவக்கினார்.

மெல்ல மெல்ல இந்த ஆலயம் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்ளை ஒருங்கிணைந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் என துவக்கபட்டது.

தைப்பூசம் நாட்களில் 48 நாட்கள் சிறப்பு பூஜை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு அளிப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாகவே சற்று உடல் நல குறைவில் இருந்து வந்த திரு பங்காரு அடிகளார் இன்று மாலை திடீர் மரணமடைந்தார்.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என முதலில் உருவாக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தவர்.

அவருக்கு வயது 82. ஆதி பராசக்தி சித்தர் பீடம் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்களும் இவர் நடத்தி வருகிறார். அவரது சேவையை பாராட்டி கடந்த 2019 மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ வழங்கியது.

பல்வேறு பிரபல அரசியல் தலைவர்கள் ஆன்மீகவாதிகள் என அவ்வப்போது அவரை சந்திப்பது வழக்கம்.

தமிழ்நாடு மட்டுமல்ல அது 12 மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் சித்தர் பீடத்திற்கு பக்தர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என்ற நிலை இருந்து வந்த நிலையில் பெண்களை கருவறைக்கு நேரடியாக சென்று அபிஷேகம் ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தியவர். மாதவிடாய் நாட்களில் கூட பெண்கள் கருவறைக்கு செல்லலாம் என விதிவிலக்கு உள்ளது.

அவர் மறைவை கேட்டவுடன் அலைகடலென பக்தர்கள் திரண்டு கண்ணீருடன் உடலை வணங்கி செல்கின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி