திமுக அமைச்சர் தூண்டுதலால் கொலை மிரட்டல்.. சொந்த கட்சி கவுன்சிலரின் உயிருக்கே ஆபத்து : பகீர் புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2024, 6:57 pm

தூத்துக்குடி மாநகராட்சியில் 60 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 40வது வார்டு மாமன்ற உறுப்பினராக ரீக்டா இருந்து வருகிறார்.

இவரது கணவர் ஆர்தர் மச்சாது. இவர்கள் இருவரும் இன்று தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் திமுக வட்டச் செயலாளர் டென்சிங் என்பவர் மீது புகார் கொடுத்துள்ளனர்.

இது குறித்து கவுன்சிலர் கணவர் ஆர்தர் மச்சாது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தூத்துக்குடி 40வது வார்டு திமுக மாநகராட்சி கவுன்சிலராக எனது மனைவி ரீக்டா மக்கள் பணி செய்து வருகிறார்.

இவருக்கு ஆதரவாக நானும் செயல்பட்டு வருகின்றேன். இந்நிலையில் இந்த 40-வது வார்டு வாட்சப் தளத்தில் 40 வது வார்டு திமுக வட்ட செயலாளர் டென்சிங் அவதூறு பரப்பும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகிறார். இது குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

இது தொடர்பாக டிஎஸ்பி அலுவலகம், தெற்கு காவல் நிலையம், ஏடிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த 18-5-2024 அன்று மாலை ஜார்ஜ் ரோடு கல்லறை தோட்டம் அருகே வைத்து திமுக வட்ட செயலாளர் பென்சிங்கின் தம்பி கெய்சன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் என் மீது வண்டியை மோதுவது போல் வந்ததுடன் கொலை செய்து விடுவேன் என மிரட்டினர்.

இது தொடர்பாக தெற்கு காவல் நிலையத்தில் கடந்த 24/5/2024 புகார் மனு அளிக்கப்பட்டு தூத்துக்குடி மணல் தெருவை சேர்ந்த கெய்சன் மற்றும் ஏம்பரர் தெருவை சேர்ந்த லூர்து அமீர் ஆகிய இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் கைது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

மேலும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவர் மீதும் தொடர்ந்து காவல்துறையினர் எவ்வித கைது நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அமைச்சர் காவல்துறையினரை மிரட்டி வருவதால் காவல்துறையினர் கைது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்து வருகின்றனர்…

இதன் காரணமாக தொடர்ந்து திமுக வட்ட செயலாளர் டென்சிங் மற்றும் கெய்சன் ஆகியோர் தங்களை மிரட்டி வருகின்றனர்.

யாரிடம் போய் சொன்னாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என கூறி வருகின்றனர். ஒரு திமுக கவுன்சிலர் மற்றும் அவரது கணவருக்கே திமுக ஆட்சியில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது..

ஆகவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக வழக்கு பதிவு செய்து திமுகவினரை கைது செய்ய வேண்டும் என்ற அவர், இதைப் போன்று தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளைச் சார்ந்த மாமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அமைச்சர் கீதா ஜீவன் வட்டச் செயலாளர்களை தூண்டி விடப்படும் சம்பவம் தொடர்கதையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் அமைச்சர் மற்றும் திமுகவினருக்கு எதிராக திமுக மாநகராட்சி பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் குற்றச்சாட்டு எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 428

    0

    0