காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் : வழக்கறிஞர் மீது அதிரடி ஆக்ஷன்… பரபரப்பில் நெல்லை!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2023, 4:48 pm

ஒட்டப்பிடாரம் உலகண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று மாலையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

அப்போது ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு சுதேசன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். மேலும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தின் போது மாட்டு வண்டியின் பின்னால் காவல் ஆய்வாளரின் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா மகன் பேச்சிமுத்து (வயது 35) திருநெல்வேலி நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வரும் இவர் இருசக்கர வாகனத்தில் தெற்குபரும்பூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது காவல் ஆய்வாளரின் வாகனத்திற்கு முன்னால் சென்று மாட்டின் முதுகில் கம்பியால் குத்தியதாக கூறப்படுகிறது .

அப்போது காவல் ஆய்வாளர் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரேஸ் நடத்திய விழா கமிட்டியினரும் சத்தம் போட்டு உள்ளனர்.

தொடர்ந்து கேட்காமல் கம்பியால் மாட்டை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் காவல் ஆய்வாளர் மீண்டும் சத்தம் போட்டு உள்ளார்

அப்போது வக்கீல் பேச்சிமுத்து, காவல் ஆய்வாளர் சுதேசனை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது . இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பேச்சி முத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!