மணல் கடத்தலை தட்டிக் கேட்ட விஏஓக்கு கொலை மிரட்டல்.. தமிழகத்தில் தொடரும் அராஜகம் : கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2023, 9:42 pm

கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி இன்றி மண் கடத்தியதாக மானத்தால் பகுதியைச் சேர்ந்த சித்துராஜ் மற்றும் உப்பாரப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த விஜி ஆகிய இருவர் மீதும் கனிம வளத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மண் கடத்திய டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் வினோத் குமார் வழக்கம் போல் இன்று காலை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது தொளசம்பட்டி அருகே உள்ள கரட்டூர் பிரிவு சாலை எனும் இடத்தில் சித்துராஜ் வழிமறித்து விஏஓவை தாக்கி செல்போனை பிடுங்கி உள்ளார்.

தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, உன்னை கொன்றால் இனி எந்த விஏஓக்களும் மண் வண்டியை பிடிக்க மாட்டார்கள் என கூறிக் கொண்டே இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த வீச்சருவாளை எடுத்து வெட்ட முயன்றுள்ளார்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட விஏஓ இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து வேகமாக தப்பி உள்ளார். ஆனால் சித்துராஜ் பின்னாலேயே வீச்சருவாளுடன் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று விஏஓவை கொல்ல முயன்றுள்ளார்.

அங்கிருந்து உயிர் தப்பிக்க விஏஓ வினோத்குமார் அருகே இருந்த தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். தொடர்ந்து சித்துராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் தொளசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சித்துராஜை வலை வீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் மணல் மாப்பியாக்களால் விஏஓ வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் விஏஓவை கொலை செய்ய வீச்சரிவாளுடன் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி,
மானாத்தாள் பகுதியில் கடந்த 18-ஆம் தேதி மணல் கடத்தலில் ஈடுபட்ட முத்துராஜ், விஜி ஆகிய இருவரை பிடித்தும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இழுவை ஊர்தி, மணல் அள்ளும் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் கிராம நிர்வாக அலுவலர்.

ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் விடுதலை செய்துள்ளனர். அதனால் ஏற்பட்ட துணிச்சல் காரணமாகவே கிராம நிர்வாக அலுவலரை முத்துராஜ் வெட்டிக்கொலை செய்ய முயன்றுள்ளார். இதற்கு காவல்துறையின் அலட்சியமே காரணம்.

தமிழ்நாட்டில் மணல் கடத்தலை தடுக்க முயலும் அலுவலர்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் நிலவுவது அவலமானது. மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் இத்தகைய சூழலை மாற்ற வேண்டும். நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 368

    0

    0