திமுக ஊராட்சி மன்ற தலைவர். திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உட்பட ஏழு பேருக்கு கொலை மிரட்டல். திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட ஜம்புதுரை கோட்டை ஊராட்சி மன்றம் இயங்கி வருகிறது .12 வார்டுகளைக் கொண்ட ஜம்புதுரை ஊராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த பவுன்தாயி காட்டு ராஜா.
இவர் துணைத்தலைவர் சிவராமனின் டிஜிட்டல் கார்டு மூலம் ஒரு கோடி 50 லட்சம் ரூபாய் நிதியை கையாடல் பண்ணி விட்டதாக கூறி கடந்த திங்கள்கிழமை அன்று ஜம்பு துறை கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவருடன் சேர்ந்து வந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது குறித்து மனு அளித்தார்.
மனுவை விசாரித்த வருவாய் அதிகாரி உடனடியாக துணைத்தலைவருக்கு சேர வேண்டிய டிஜிட்டல் கார்டை ஒப்படைக்கும் படி உத்தரவு பிறப்பித்த நிலையில் கடந்த 17ஆம் தேதி டிஜிட்டல் கார்டு துணைத் தலைவர் சிவராமனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பவுன் தாய் அவரது கணவர் காட்டு ராஜா மற்றும் ஊராட்சி செயலர் ஆகிய மூவரும் தொலைபேசி வாயிலாகவும் நேரடியாகவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட திமுக துணைத்தலைவர் சிவராமன் உட்பட அனைத்து வார்டு உறுப்பினர்களையும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் ஜாதிய மோதலை ஏற்படுத்தும் விதத்தில் பேசி வருவதாகவும் தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சியில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உட்பட ஏழு பேர் மீது கொலை மிரட்டல் விடுவதும் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் ஊழல் செய்துள்ளதும் தற்போது நிலக்கோட்டை தொகுதி ஜம்பு துறை கோட்டை ஊராட்சி முழுவதும் பெறும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஊழல் செய்து கொலை மிரட்டல் விடுக்கும் ஜம்புதுரை கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பவுன் தாய் மற்றும் அவரது கணவர் காட்டு ராஜா ஊராட்சி செயலர் மீது அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.