தவெக மாநாட்டுக்குச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தது குறித்து இதுவரை கட்சித் தரப்பில் எதுவும் கேட்கவில்லை என உறவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: விஜயின், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று (அக்.27) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றினார்.
இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, செயல் திட்டங்கள், கொடி விளக்கம், தவெக பெயர்க் காரணம், அரசியல் நிலைப்பாடு, அரசியல் எதிரி என அனைத்தையும் தனது சுமார் 50 நிமிட உரையின் மூலம் நிகழ்த்தினார்.
இதனிடையே, நேற்று மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் பைக், கார், வேன், பேருந்து, ரயில் என பயணம் செய்து வந்தனர். அந்த வகையில், சென்னை மூர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தனது நண்பருடன் சேர்ந்து பைக்கில் மாநாட்டிற்காக புறப்பட்டு உள்ளார்.
அப்போது, தேனாம்பேட்டை சிக்னல் அருகே ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்கள் உடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நேற்று நடந்தது மாநாடு அல்ல…. சினிமா பட ஷூட்டிங்..பாஜகவின் C TEAM தான் த.வெ.க : திமுக அமைச்சர் கதறல்!
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்த இளைஞரின் உறவினர், “அன்று இரவு தான் ஈசிஆரில் இருந்து வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தான். நாளை விஜய் மாநாட்டுக்குச் செல்ல உள்ளதாக என்னிடம் கூறினான். நீ அஜித் ரசிகர், ஏன் அங்கு செல்கிறாய் எனக் கேட்டேன்.
எங்க தலயே சொல்லிட்டாரு, நான் போவேன் என கூறினான். பின்னர், அவனது தங்கையிடம் பேசினான். இதனையடுத்து, காலை செல்வதாக கூறிவிட்டுச் சென்றான். அவன் சென்ற 20வது நிமிடத்தில் இறந்துவிட்டான் என எனக்கு போன் கால் வந்தது. அவனுக்கு அப்பா – அம்மா இல்லை.
ஒரு தங்கை மட்டுமே. பெரியம்மாவகிய என்னிடமே அவன் வளர்ந்து வருகிறான். இந்தச் செய்தியைக் கேட்டதும் என்னாலும் முடியவில்லை, அவனது தங்கையாலும் முடியவில்லை. இது குறித்து இதுவரை தவெகவில் இருந்து யாரும் எதுவும் பேசவில்லை. அவனுடன் சென்ற மற்ற யாரும் இன்னும் ஊர் திரும்பவில்லை” என கண்ணீர் மல்க கூறினார்.
மேலும், இவரைத் தவிர, ரயிலில் இருந்து விக்கிரவாண்டி அருகே குதித்த ஒருவரும், கார் விபத்தில் மற்ற இருவரும் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.