பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை :கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்க பொதுக்குழு கூட்டத்தில் முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2022, 6:03 pm

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தை தலைவர் உதயகுமார், செயலாளர் சந்திர பிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன், துணை செயலாளர் மைக்கேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் இலவசமாக கண் மற்றும் பல் மருத்துவப் பரிசோதனை நடத்துவது எனவும், கோவை நகரில் முக்கிய பகுதிகளில் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது எனவும் மாநகராட்சி எல்லையில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு இலவசமாக பாய், சாப்பாடு தட்டு, டம்ளர் போன்ற பொருட்களை வழங்குவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கோவை மாநகராட்சி கமிஷ்னரை சந்தித்து நிலுவையில் உள்ள பில் தொகை மற்றும் பில்லில் பிடித்தம் செய்த 5% தொகை மற்றும் பில்லில் பிடித்தம் செய்த 5% தொகையை விரைவாக வழங்க நடவக்கை எடுக்க வேண்டும்.

பட்டியல் தொகையுடன் வழங்கப்படும் ஜிஎஸ்டி தொகை 12 சதவீதத்தை 18 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

சங்க உறுப்பினர் நந்தகோபால் மறைவுக்கு இந்த கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. வரும் மார்ச் மாதம் சங்க உறுப்பினர்களுக்கு இன்சூரன்ஸ் புதுப்பித்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. மாநகராட்சியில் நடக்கும் திட்டப் பணிகள், பில் பாக்கி இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!