திரிஷா விவகாரத்தால் சிக்கிய குஷ்பு.. கைது செய்ய முடிவு? போலீஸ் குவிப்பு… வெளியான காரணத்தால் பரபரப்பு..!!

Author: Udayachandran RadhaKrishnan
24 November 2023, 7:24 pm

திரிஷா விவகாரத்தால் சிக்கிய குஷ்பு.. கைது செய்ய முடிவு? போலீஸ் குவிப்பு… வெளியான காரணத்தால் பரபரப்பு..!!

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு கண்டனங்களை பலரும் தெரிவித்தனர்.

பாஜக நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்பதால் அங்கு புகார் செய்தார். இதனடிப்படையில் தேசிய மகளிர் ஆணையமானது மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்தது. தற்போது இந்த பிரச்சனையில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டார்; திரிஷாவும் மன்னித்துவிட்டார்.

ஆனால் திரிஷா விவகாரத்தில் நடிகை குஷ்பு தலையிட்டது பெரும் பிரச்சனையாகிவிட்டது. திரிஷா விவகாரத்தில் எக்ஸ் பக்கத்தில் விவாதம் நடத்திய நடிகை குஷ்பு, ஒரு பதிவில் ‘சேரி மொழி’ ‘சேரி பாஷை’ என குறிப்பிட்டிருந்தார்.

குஷ்புவின் இந்த பதிவுதான் இப்போது சர்ச்சையின் மையம். தலித் மக்கள் வாழும் குடியிருப்புகள் சேரி என அழைக்கப்படும்; அப்படியானால் தலித் மக்களின் மொழியான சேரி மொழி இழிவானது என்கிறார் குஷ்பு என பிரச்சனை வெடித்தது. ஆனாலும் குஷ்புவோ, சேரி என்றால் பிரெஞ்ச் மொழியில் அன்பு என பொருள் என வியாக்கியானம் செய்ய கொந்தளிப்பு அதிகமானது.

இதனால் நடிகை குஷ்பு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களும் குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்று மாலை 5 மணிக்குள் குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் எனவும் காங்கிரஸ் அறிவித்தது.

இந்த பரபரப்புகளுக்கு இடையே சென்னையில் நடிகை குஷ்பு வீடு முன்பாக திடீரென 100க்கும் மேற்பட்ட போலீசார் திமுதிமுவென வந்திறங்கினர். பெண் போலீசார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனால் நடிகை குஷ்பு கைது செய்யப்படப் போகிறாரா? என்கிற கேள்வி எழுந்தது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தை அறிவித்திருப்பதால் குஷ்புவின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கவும் போலீசார் குவிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ