கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக களமிறங்க முடிவு? திருநாவுக்கரசர் போட்ட புது குண்டு!!!
Author: Udayachandran RadhaKrishnan26 June 2023, 11:29 am
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிலையிலிருந்து பத்து லட்ச ரூபாய் மதிப்பில் இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது அதன் கட்டுமான பணிகளை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நாங்கள் ராகுல் காந்தியை தான் முன்னிருத்துகிறோம், ராகுல் காந்தி மக்கள் மனதை கவர்ந்த ஒட்டுமொத்த தலைவராக திகழ்கிறார்.
நடிகர் விஜய் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்ததும் ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று கூறியதும் வரவேற்கத்தக்கது, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்,விஜய் அரசியலுக்கு வருவதும் வராமல் இருப்பதும் அவரது முடிவு,எதிர்காலத்தில் பணம் வாங்காமல் வாக்களிக்கும் காலம் வரவேண்டும்,அப்படி ஒரு காலம் வந்தால் அது தேசத்திற்கு பொற்காலம்,
தமிழ்நாடு ஆளுநர் எங்கு சென்றாலும் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றே பேசி வருகிறார்,அவர் விவரம் தெரியாமல் பேசவில்லை,விளம்பர வெளிச்சத்திற்காக சர்ச்சையாக வேண்டுமென்று பேசி வருகிறார்,ஒன்று அவர் தன்னிச்சையாக பேச வேண்டும் அல்லது மத்திய அரசு சொல்லி பேச வேண்டும்,
ஜனநாயக நாட்டில் அந்தந்த கட்சிகளின் கருத்துக்களை சொல்வது அவர்களின் உரிமை,அதன் அடிப்படையில் தான் திருமாவளவன் தனது கருத்துக்களை சொல்லி வருகிறார், கருத்துக்களை சொல்வதால் கூட்டணி கட்சியை விட்டு வெளியே செல்வார்கள் என்பதும் என்பதும் வேறு கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதும் தவறான யூகங்கள் அதனை ஆராய்ச்சி செய்ய வேண்டாம்,
தமிழ் மொழி குறித்து உலக நாடுகளுக்கு செல்லும் தலைவர்கள் பேசுவது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான் ஏனென்றால் தமிழ் மொழியை புறக்கணிக்க முடியாது,முதன்மையான பிரதான மொழி தமிழ் மொழி,மோடி இதுபோன்று ஆதரவாக அவர் தமிழர்களின் வாக்குகளை வாங்க முடியாது.
இவ்வாறு பேசுவதால் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தால் அது பொய்த்து போகும். திமுக கூட்டணி கட்சியில் உள்ள கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என ஜெயக்குமார் கூறியிருப்பது அவர்களின் பரிதாப நிலையை காட்டுகிறது,ஏனென்றால் அதிமுகவில் கூட்டணி கட்சிகளே கிடையாது திமுகவில் உள்ள யாரும் அங்கு செல்வதற்கும் வாய்ப்பில்லை,
அமலாக்கத்துறை குறிப்பிட்டு சில மாநிலங்களில் மட்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது, பாஜக ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் ஏஜென்சிகள் சோதனை நடத்தாமல் காங்கிரஸ் ஆம் ஆத்மி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் சோதனை நடத்துவது தான் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது இது போன்ற சோதனைகள் ஒருதலைப் பட்சமாக அமையக்கூடாது.
கடந்த காலங்களில் பலர் இலாக்கா இல்லாத அமைச்சர்களாக தொடர்ந்துள்ளனர். சட்ட ரீதியாக இதற்கு எந்த தடையும் இல்லாததால் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதில் சர்ச்சைக்கு இடமில்லை.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை யாருக்கு கொடுத்தாலும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் அல்லது இப்போது இருப்பவரை தொடர் சொன்னாலும் தொடர்வார். இது ஒரு நியமன பதவி தான் இது குறித்து காங்கிரஸ் டெல்லி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் எனக்கு அந்த பதிவியை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன்.