தலைவர் பதவியை பறிக்க முடிவு? நாடாளுமன்ற தேர்தலுக்கே முன்பே வியூகம்!
Author: Udayachandran RadhaKrishnan1 October 2023, 8:25 pm
தலைவர் பதவியை பறிக்க முடிவு? நாடாளுமன்ற தேர்தலுக்கே முன்பே வியூகம்!
சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக காங்., தலைவராக, அழகிரி பொறுப்பேற்று, மூன்று ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அவரை நீடிக்க விடக்கூடாது என்பதில், மூத்த தலைவர்கள் தீவிரமாக பணியாற்றுகின்றனர்.
இதற்காக, பலமுறை டில்லி சென்று வந்து விட்டனர். ஆனாலும், அழகிரியைமாற்ற முடியவில்லை. அவரை மாற்றும் எண்ணம், தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேக்கு இருக்கிறது. ஆனால், ராகுல் விருப்பப்படாததால், அழகிரிக்கு பதவி தொடருகிறது. இந்நிலையில், தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சை துவங்குவதற்குள், அழகிரியை மாற்றி விட வேண்டும் என கோஷ்டி தலைவர்கள் துடிக்கின்றனர்.
கூட்டணி பேச்சு துவங்கி, தலைவர் என்ற முறையில் அழகிரி கலந்து கொண்டு விட்டால், தேர்தல் முடியும் வரை, அவரை மாற்ற வாய்ப்பே இல்லை என்பதால், மூத்த தலைவர்கள் அவசரப்படுகின்றனர். ஆனால், அவர்கள் முயற்சி பலிக்குமா என்று தெரியவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.