விவசாய கிணற்றில் விழுந்த புள்ளி மான்: பொதுமக்கள் உதவியுடன் உயிருடன் மீட்ட வனத்துறையினர்..!!

Author: Rajesh
20 March 2022, 1:37 pm
Quick Share

செங்கம் அருகே வனப்பகுதியிலிருந்து குடிநீர் தேடிவந்து விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் மீட்டு காட்டிற்குள் விட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீதாண்டப்பட்டு பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மான்கள் மற்றும் காட்டுவிலங்குள் ஏராளமாக உள்ளது. வனப்பகுதியில் உள்ள காட்டு விலங்குகளுக்கு காட்டில் குடிநீர் இல்லாமல் அடிக்கடி அருகில் உள்ள ஊருக்குள் தண்ணீர் தேடிவருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் தீதாண்டப்பட்டு வனப்பகுதியில் இருந்து இன்று புள்ளிமான் ஒன்று குடிநீர் தேடி அருகில் உள்ள சந்திரன் என்பவரது விவசாய கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்துள்ளது. இதனை கண்ட விவசாயி மற்றும் ஊர் பொதுமக்கள் செங்கம் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த செங்கம் தீ அணைப்பு மற்றும் மீட்பு துறையினர் கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்த புள்ளிமானை உயிரிடும் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். வனப்பகுதியில் உள்ள காட்டு விலங்களுக்கு குடிநீருக்காக காட்டில் தொட்டி அமைத்து ஊருக்குள் வராமல் தடுத்து காட்டுவிலங்குகளின் உயிரிழப்பினை தடுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 1195

    0

    0