அமைச்சருக்கு எதிராக அவதூறு… கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகருக்கு நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2023, 6:25 pm

பாஜக மாநிலத் தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் அமைச்சர் செந்தில் பாலாஜியை துஷ்பிரயோக வார்த்தைகளை பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவுகளை பதிவிட்டதாக கோவை கணபதி புதூர் பகுதியே சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று காலை செல்வகுமாரை கைது செய்தனர்.

இதனை அடுத்து அவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்4 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

இதனை அடுத்து அவர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் பாரத் மாதா கி ஜே என்ற முழக்கங்களை எழுப்பியவாறு சென்றார்.

நீதிமன்றத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஏற்பட பாஜகவினர் சிலர் திரண்டு இருந்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ