பாகுபலி பட காட்சியை சித்தரித்து பிரதமர் மோடி குறித்து அவதூறு : ஆர்எஸ் பாரதி மகன் மீது பரபரப்பு புகார்.!

Author: Udayachandran RadhaKrishnan
8 ஆகஸ்ட் 2024, 6:59 மணி
RS
Quick Share

சென்னை கமிஷ்னரிடம் பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியின் மகன் மீது பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது பாரதப்‌ பிரதமர்‌ மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின்‌ மாண்பையும்‌ மரியாதையையும்‌ குலைக்கும்‌ வகையில்‌ கொச்சையான அவதூறுகளை சமூக வலைதளங்களில்‌ பதிவிடுதல்‌ மற்றும்‌ அதை பரப்புதல்‌, மக்களிடையே தேசத்தின்‌ மீதான வெறுப்புணர்வை தூண்டுதல்‌, ஒரு பிரிவினரின்‌ மனதை புண்படுத்தும்‌ நோக்கத்தில்‌ பதிவிடுதல்‌ ,ஒரு பிரிவினரை தூண்டி , சீனம்‌ ஊட்டி அதன்‌ மூலம்‌ கலவரத்தை ஏற்படுத்தவும்‌, சமூக நல்லிணக்கத்தை குலைக்கவும்‌ முயற்சித்தல்‌, தேசத்தின்‌ மாண்பு ஒற்றுமை மற்றும்‌ இறையாண்மையை குலைக்கும்‌ வகையில்‌ செயல்படுதல்‌ மற்றும்‌ பதிவிடுதல்‌ ஆகிய குற்றங்களுக்காக சாய்‌ லட்சுமிகாந்த்‌ பாரதி என்பவர்‌ மீது புகார்‌ அளித்தல்‌ சார்பு.

மேற்கண்ட சாய்‌ லட்சுமிகாந்த்‌ பாரதி என்கிற நபர்‌ தனது சமூக வலைத்தள பக்கத்தில்‌
இன்று (08.08.2024) வெறுப்புணர்வைத்‌ தூண்டும்‌ வகையிலான கொச்சையான அவதூறு
பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார்‌ .

மேற்கண்ட அந்த பதிவில்‌, நமது பாரதப்‌ பிரதமர்‌ நரேந்திர மோடி அவர்களை
கொச்சைப்படுத்தும்‌ விதமாகவும்‌, அவதூறு செய்யும்‌ விதமாகவும்‌ . நம்‌ தேசத்தின்‌
மீதான மாண்பு மற்றும்‌ நல்ல எண்ணத்தை சீர்குலைக்கும்‌ நோக்கத்தோடும்‌
வேண்டுமென்றே ஒரு சித்தரிப்பு படத்தை வெளியிட்டுள்ளார்‌.

அதில்‌ , பாகுபலி திரைப்படத்தின்‌ காட்சியை அடிப்படையாகக்‌ கொண்டு. ராஜ துரோகம்‌ என்ற தலைப்பில்‌, பாரத பிரதமர்‌ நரேந்திர மோடி அவர்கள்‌ மல்யுத்த வீராங்கனை வினேஷ்‌ போகத்‌ அவர்களை பின்னால்‌ இருந்து கத்தியால்‌ முதுகில்‌ குத்துவது போல சித்தரித்து அந்தப்‌ படத்தை பதிவிட்டுள்ளார்‌.

இந்த பதிவானது, நமது பாரதப்‌ பிரதமர்‌ மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள்‌ மீது
கொச்சையான அவதூறு பரப்ப வேண்டும்‌ என்ற நோக்கத்தோடு , மக்களிடையே இந்த
தேசத்தின்‌ மீதான வெறுப்புணர்வை தூண்டும்‌ வகையிலும்‌, அவ்வாறு அவதூறுகளை
பரப்பி தேசப்பற்றாளர்கள்‌ மற்றும்‌ அவரது ஆதரவாளர்களையும்‌ தூண்டி சீன மூட்டி
கலவரத்தை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும்‌ என்ற
நோக்கத்திலும்‌, செய்யப்பட்டுள்ளது. மேலும்‌ தேசப்பற்றாளர்கள்‌ மற்றும்‌ அவரது
ஆதரவாளர்களை புண்படுத்தும்‌ நோக்கத்திலும்‌ தேசத்தின்‌ மாண்பு, ஒற்றுமை மற்றும்‌
இறையாண்மையை குலைக்கும்‌ வகையிலும்‌ வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது.

வினேஷ்‌ போகத்‌ அவர்கள்‌ 50 கிலோ எடை பிரிவில்‌ மல்யுத்த போட்டியில்‌ ஒலிம்பிக்‌
போட்டிகளில்‌ கலந்து கொண்டுள்ள நிலையில்‌ இறுதிப்போட்டிற்கு செல்லும்‌ வேளையில்‌ அவரது எடை அதிகம்‌ என்று கூறி ஒலிம்பிக்‌ நிர்வாகம்‌ கலந்து கொள்வதற்கு தடை செய்துள்ளது. இது தொடர்பாக பாரத பிரதமர்‌ நரேந்திர மோடி அவர்களும்‌ வினேஷ்‌ போகத்‌ அவர்களுக்கு ஆறுதல்‌ கூறி அவர்களை தெம்பேற்றும்‌ விதத்தில்‌ அறிக்கை விடுத்துள்ளார்‌.

இந்நிலையில்‌ அவர்‌ எடை அதிகம்‌ என்ற காரணத்திற்காக ஏற்பட்ட தகுதி இழப்பிற்கும்‌
பாரத பிரதமர்‌ நரேந்திர மோடி அவர்களுக்கும்‌ ஏதோ தொடர்பு இருப்பது போன்ற
தவறான சித்தரிப்பை வேண்டுமென்றே மேற்குறிப்பிட்ட பதிவின்‌ மூலம்‌
மேற்குறிப்பிட்ட நபர்‌ ஏற்படுத்தியுள்ளார்‌ . இந்திய தேசத்தின்‌ சார்பாக ஒலிம்பிக்‌
போட்டிகளில்‌ பங்கேற்க கூடிய விளையாட்டு வீரருக்கு எதிராக இந்திய தேசத்தின்‌
பிரதமரே சதி செய்கிறார்‌ என்கிற பொய்யான அவதூறான, மோசமான, கொச்சையான
பொய்‌ செய்தியை பரப்புவதன்‌ மூலம்‌ மேற்குறிப்பிடப்பட்ட நபர்‌, தேசத்தின்‌ மாண்பு,
ஒற்றுமை மற்றும்‌ இறையாண்மையை குலைக்கும்‌ வகையிலும்‌, அந்த நோக்கத்தோடும்‌
செயல்பட்டுள்ளார்‌ என்பது தெளிவாக தெரிகிறது.

இவர்‌ திராவிட முன்னேற்ற கட்சியை சார்ந்தவர்‌ மற்றும்‌ திமுகவின்‌ அமைப்பு
பொதுச்செயலாளர்‌ ஆர்‌ எஸ்‌ பாரதி அவர்களின்‌ மகன்‌ ஆவார்‌. ஆயினும்‌ காவல்துறை
ஆணையாளர்‌ அவர்கள்‌ இந்த மேற்குறிப்பிட்ட நபர்‌ மீது உடனடியாக சட்டரீதியான
நடவடிக்கையை எடுத்து காவல்துறையின்‌ சிறப்பையும்‌ சீரிய செயல்பாட்டையும்‌ உறுதி செய்யும்‌ என நம்புகிறேன்‌. எனவே, மேற்குறிப்பிட்ட என்ற நபர்‌ மீது பாரதிய நியாய சட்டத்தின்‌ பிரிவுகள்‌ 152, 196, 197, 296, 356, 352, 353 உள்ளிட்ட பிரிவுகளின்‌ கீழ்‌ சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • வாய்ப்பில்ல ராஜா.. வாத்தியார் தவறு செய்ய மாட்டார்.. அடித்துச் சொல்லும் சீமான்
  • Views: - 156

    0

    0