திமுகவுக்கு சனி ஆரம்பம்.. 2026 தேர்தலில் கிடைக்கும் தோல்விதான் சரியான பரிசு!
Author: Udayachandran RadhaKrishnan4 February 2025, 7:44 pm
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.
இதையும் படியுங்க: பெண் விஏஓ மீது மாட்டுச்சாணம் வீச்சு.. கள்ளக்குறிச்சியில் மீண்டும் பரபரப்பு!
முருக பக்தர்களுடன் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் திருப்பரகுன்றம் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால், நேற்று காலை முதல் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் அலுவலகம் அமைந்துள்ள திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாநகர காவல் துணை ஆணையர் ராஜராஜன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருப்பரங்குன்றம் செல்வதற்காக அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் கையில் வேலுடன் இறங்கி வந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி தொண்டர்கள் திடீரென தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைது செய்ததை கண்டித்து, இந்து முன்னணி தொண்டர் ஒருவர் திடீரென பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அவரை தடுத்து நிறுத்திய போலீஸார், தண்ணீரை ஊற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 5 பெண்கள் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக நீதிமன்ற உத்தரவுப்படி, கைதனாவர்களை விடுவிக்கக்கோரி பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில் அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினர் விடுவிக்கப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நீதிமன்றத் தீர்ப்பு இந்துக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. கடவுள் மறுப்பு அரசாங்கத்துக்கு இது மிகப்பெரிய தோல்வி.
இரவோடு, இரவாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? நீதிமன்றம் அனைவரையும் விடுவிக்க சொல்லி உள்ளது. எங்களுக்கு உரிய உத்தரவுகள் வரவில்லை என கூறி போலீஸார் தாமதம் செய்தனர்.
அரசாங்கத்துக்கு சனி திசை பிடித்துள்ளது. வரும் 2026-ம் ஆண்டு கிடைக்கும் தோல்வி தான், இந்துக்கள் திமுக தரும் பரிசாகும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் திருப்பரங்குன்றம் புறப்பட்டு சென்றார்.