EVM இயந்திரத்தில் குறைபாடு.. தேர்தல் ஆணையம் SILENT : உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ் பாரதி வழக்கு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2024, 9:25 pm

EVM இயந்திரத்தில் குறைபாடு.. தேர்தல் ஆணையம் SILENT : உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ் பாரதி வழக்கு!!

விவிபாட் இயந்திரம் மூலம் பெறப்படும் ரசீதுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை மே 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்நிலையில், இவிஎம் இயந்திரத்தில் உள்ள சில குறைபாடுகளை சரிசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பாக, தி.மு.க. செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்காததால் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

  • gangers movie beat good bad ugly single day collection குட் பேட் அக்லிக்கு மூடு விழா நடத்திய கேங்கர்ஸ்? கடைசில இப்படி ஆகிடுச்சே!