வாங்கி 2 நாள் தான் ஆச்சு DISPLAY போச்சு.. ஷோரூமின் அலட்சிய பதிலால் அதிர்ச்சி அடைந்த கஸ்டமர்..!

Author: Vignesh
28 August 2024, 4:42 pm

இரண்டே நாளில் புதிய செல்போன் டிஸ்பிலே பிரச்சினை – செல்போன் ஷோரூமில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கோவை வாகராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் இவர். ஆட்டோ ஓட்டுனர் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள எம் ஐ ஷோரூம் 19 .8 .2024 அன்று POCO C61 புதிய செல்போனை வாங்கி உள்ளார். அதனை அடுத்து அந்த செல்போன் 21. 8 .2024 அன்று டிஸ்ப்ளே பிரச்சனை வந்தது.

இதனை அடுத்து, அங்கு சென்ற தினகரன் அந்த செல்போன் சரியில்லை என காட்டியதற்கு சர்வீஸ் செய்து தருகிறேன் என அந்த கடை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு தினகரன் புதிய செல்போன் இது எதற்காக சர்வீஸ் செய்ய வேண்டும். புதிய மொபைல் வேண்டும் என கேட்டு உள்ளார். கடை நிர்வாகிகள் மிகவும் ஏளனமாக இவரை பேசி உள்ளார்கள். உடனடியாக தினகரன் அந்த செல்போனை அந்த கடையிலே விட்டு விட்டு சென்று விட்டார். இது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 272

    0

    0