திட்டமிட்டே நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் நீக்கம்… திருமாவளவன் கண்டனம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2023, 1:22 pm

நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர் மற்றும் காந்தி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெறவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டதை அடுத்து, இது அதிர்ச்சி தரும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது என திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி ஆலந்தூரில் புதிய நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள அம்பேத்கர் படம் உட்பட நீக்கவும், வள்ளுவர், காந்தி படங்கள் மட்டுமே அனைத்து நீதிமன்றங்களில் இடம்பெறவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,இது திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

அம்பேத்கரின் படங்களை அப்புறப்படுத்தவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக தெரிகிறது. இந்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?