டெல்லி – சென்னை.. சவுக்கு சங்கர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ்.. விசாரணையில் இறங்கிய போலீஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2024, 9:32 am

டெல்லி – சென்னை.. சவுக்கு சங்கர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ்.. விசாரணையில் இறங்கிய போலீஸ்!

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் எடிட்டர் பெலிக்சை டெல்லியில் வைத்து திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

முன்ஜாமீன் கோரி பெலிக்ஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என மறுத்தது.

அநாகரீகமாக விவாதம் செய்த பெலிக்சை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ்பாபு கூறி இருந்தார்.

மேலும் படிக்க: மக்களவைக்கு 3 முறை தேர்வு.. எளிமையான எம்பி : இறுதிவரை செங்கொடி ஏந்திய எம்பி செல்வராஜ் காலமானார்!

முன்ஜாமீன் மனு விசாரணையை ஒரு வார காலம் ஐகோர்ட்டு ஒத்தி வைத்திருந்த நிலையில் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து சென்னையில் இருந்து வேன் மூலம் பெலிக்சை திருச்சி அழைத்துச் சென்று, அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!