தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தது மாநகராட்சி : பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் போராட்டம் வாபஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan4 October 2022, 12:25 pm
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அறிவித்த ரூ.721/- தினசரி ஊதியமாக வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் காப்பீடு பி.எப் இ.எஸ் ஜ முறைபடுத்த வேண்டும் எனவும் 15ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது,
இதையடுத்து தூய்மை பணியாளர்கள் சங்க பிரதிநிதி, மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்டோருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளது. இதனால் தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இது குறித்தான குறிப்பாணையை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதில் தூய்மை பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து வரும் மாமன்ற கூட்டங்களல் உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசின் பார்வைக்கும் அனுப்பி வைத்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது போராட்டம் தொட்பாக தூய்மை பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காரணம் கேட்டும் குறிப்பாணைகள் விலக்க பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.