திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் : கொட்டும் மழையிலும் ஓங்கிய கோஷம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2022, 6:26 pm

திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் பழனி அருகே கீரனூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது – 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி பழனி அருகே கீரனூர் பேரூராட்சியில் அதிமுக பொருளாளரும் வனத்துறை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் சாரல் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!