‘8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்’: செங்கத்தில் பசுமாடுகளுடன் நூதன முறையில் கவன ஈர்ப்பு போராட்டம்..!!
Author: Rajesh20 March 2022, 5:40 pm
திருவண்ணாமலை: செங்கத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் பசுமாடுகளுடன் நூதன முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பெரும்புட்டம் கிராமத்தில் நேற்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற திமுக எம்.பி. திருச்சி சிவா அவர்கள் சென்னை to சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை பொருத்தவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பு தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு எ.வ. வேலு அவர்கள் சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டம் “முதல்வரின் கொள்கை முடிவுபடி செயல்படுவோம்” என்றும் இறுதியில் முதல்வரின் ஆணைப்படி பணி நடைபெறும் என்றும் தொடர்ச்சியாக பேசி வருவதாகவும் இது விவசாயிகளிடையே பெரும் குழப்பத்தையும், மனவேதனையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருவதாகவும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையாக கூறப்பட்ட சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என்ற அரசாணையை வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பசுமாடுகளுடன் கோஷங்கள் எழுப்பியும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுட்டனர்.