சாமி குத்தம்.. தீட்டு பட்டுருச்சு.. பட்டியலின மக்களுக்கு கோவிலில் அனுமதி மறுப்பு : அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 April 2023, 5:02 pm

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஆலம்பள்ளம் கிராமத்தில் மலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் 48 நாள் மண்டகப்படிக்கு, பட்டியல் இனத்தவர்களை மாற்று சமூகத்தினர்,கோவிலுக்குள் அனுமதிக்க தடை விதித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஆலம்பள்ளம் கிராமத்தில் மலை மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேகத்தின் போது பட்டியல் இன சமூகத்தினர் வரக்கூடாது என மாற்று சமூகத்தினர் தடை விதித்தனர்.

அதன் பிறகு,பஞ்சாயத்து தலைவர் உமாராணி முயற்சியில், பட்டியல் சமூக மக்கள் திரண்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து மனு அளித்தனர்.

இது தொடர்பாக,கலெக்டர் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் உதவியுடன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதனால் சாமி குத்தம் ஆகிவிட்டது, தீட்டுப்பட்டு விட்டது என்ற அடிப்படையில், பட்டியல் இன மக்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர்கள் வெளியூரில் சென்று பிழைப்பு தேட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 48 நாள் மண்டபடியில் எங்களுக்கும் ஒரு நாளில் சாமி கும்பிட்டு அபிஷேகம் செய்வதற்கான தேதியை ஒதுக்கி கொடுங்கள் என மீண்டும் வட்டாட்சியர், டி.எஸ்.பி, உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளிடமும் மனு அளித்தனர்.

அதன் பேரில் இரண்டு நாட்கள் தொடர்ந்து தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அமைதி பேச்சு வார்த்தையில் கிராம கமிட்டி தலைவர் பாலசுப்பிரமணியன் என்பவர் மட்டும் வந்து அந்த நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும், ஊர் மக்கள் அனைவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் கருத்தை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பட்டுக்கோட்டை நகராட்சி கவுன்சிலர் சதாசிவகுமார் உடன் ஆலப்பள்ளம் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் உமாராணி தலைமையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முடிவு காணப்படாத சூழ்நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாலும் கோவில் போலீசார் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு, கோவிலை பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இருதரப்பிற்கும் இடையே பிரச்சனைகள் சமூக தீர்வு கட்டும் முறை, கோவில் பூட்டப்பட்டு இருக்கும் என வருவாய்த்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 504

    0

    0