மாதா கோவிலில் மாலை போட அண்ணாமலைக்கு அனுமதி மறுப்பு.. இளைஞர்கள் எதிர்ப்பு : காவல்துறை கொடுத்த ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2024, 9:01 am

மாதா கோவிலில் மாலை போட அண்ணாமலைக்கு அனுமதி மறுப்பு.. இளைஞர்கள் எதிர்ப்பு : காவல்துறை கொடுத்த ட்விஸ்ட்!

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பள்ளிப்பட்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று என் மண் என் மக்கள் தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டார்.

லூர்து அன்னை ஆலயத்தில் உள்ள மாதா சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக ஆலயத்திற்குள் சென்றார். அப்போது மாதா சிலைக்கு முன்பு நின்றிருந்த இளைஞர்கள் மணிப்பூர் கலவரத்தின் போது பாஜக சார்பில் சிறுபான்மையர் மக்களுக்கு எந்த ஒரு குரலும் கொடுக்கவில்லை என தெரிவித்து நீங்கள் மாலை அணிவிக்க வேண்டாம் என அங்கிருந்து இளைஞர்கள் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மணிப்பூர் விவகாரம் குறித்து அந்த இளைஞர்களுக்கு விவரித்த அண்ணாமலை எவ்வளவு எடுத்துக் கூறியும் நீங்கள் மாலை அணிவிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்த காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களை அப்புறப்படுத்திய பின்பு பாஜக தலைவர் அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவித்துச் சென்றார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மாதா சிலைக்கு அணிவித்த மாலையை அகற்றி தூக்கி எறிந்தனர்.

என் மண் என் மக்கள் தலைப்பில் நடை பயணம் மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?