ஆதியோகி சிலைக்கு அனுமதி மறுப்பா? எல்லாமே தயாரா இருக்கு : தமிழக அரசுக்கு ஈஷா யோகா மையம் விளக்கம்!!!
Author: Udayachandran RadhaKrishnan24 August 2023, 9:16 pm
ஆதியோகி சிலைக்கு அனுமதி மறுப்பா? எல்லாமே தயாரா இருக்கு : தமிழக அரசுக்கு ஈஷா யோகா மையம் விளக்கம்!!!
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் சுற்றியுள்ள கட்டடங்களை கட்ட எந்த முன் அனுமதியோ, தடையில்லா சான்றோ பெறப்படவில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஈஷா மையம் அமைக்கப்பட்டுள்ளதாக, வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வனப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஆதியோகி சிலை மற்றும் சுற்றியுள்ள கட்டடங்களை கட்ட எந்த முன் அனுமதியும், தடையில்லா சான்றோ பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
இதையடுத்து, ஈஷா அறக்கட்டளை தரப்பு தாக்கல் செய்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குநர் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கட்டிடம் கட்ட அனுமதி பெறவில்லை என தெரியவந்தால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து ஈஷா அளித்துள்ள விளக்கத்தில், ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல்கள் எங்களிடம் உள்ளது, அதை எங்கேயும் எப்போதும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம்.
ஆதியோகி சிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளை பெற்றுள்ளோம். மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிகாரிகள் முன் அதை சமர்பிப்போம் என பதில் அளித்துள்ளனர்.
1
0