காமெடி நடிகருடன் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்தை சித்தரித்து அவதூறு : வசமாக சிக்கிய காவலர்!!
Author: Udayachandran RadhaKrishnan16 ஜூன் 2023, 6:14 மணி
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பெருமாள். இவர் நெல்லை பெருமாள் என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை நேரில் சென்று பார்த்த தமிழக முதலமைச்சரின் புகைப்படத்தையும் வைத்து அதோடு காமெடி நடிகர் போண்டாமணியின் புகைப்படத்தையும் இணைத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு நடிகர் பிரபு நாதஸ்வரம் வாசிப்பது போன்ற காட்சியையும் இணைத்துள்ளார்.
இது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணி இணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா தலைமையிலான திமுகவினர் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.
இந்த நிலையில் முதல் நிலைக் காவலர் நெல்லை பெருமாள் பனியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல் தெரிவித்தார். இதனிடைய மாலை ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்:-
காவல் துறையின் அமைச்சரான முதலமைச்சர் மீது அவதூறு பரப்பும் வகையில் முதல் நிலை காவலர் பதிவிட்டுள்ளார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். பணியிடை நீக்கம் செய்தது மட்டும் போதுமானது அல்ல என்று தெரிவித்தார்.
0
0