எச்சில் துப்பி கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் பாஜக பிரமுகர்.. துணை மேயரின் பரபரப்பு விளக்கம்..!
Author: Vignesh5 August 2024, 7:56 pm
எனது சாவி கீழே விழுந்ததால் குனிந்து எடுத்தேன் அவர்களை தாக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பாஜகவின் பின்புலத்தில் தன் மீது பொய் புகார் அளிக்கின்றனர். என துணைமேயர் நாகராஜன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மூதாட்டி அளித்த புகார் தொடர்பாக துணைமேயர் பேட்டி அளித்துள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்பதற்காக தூண்டுதலின் பெயரில் தவறான புகார்களை அளித்துவருகின்றனர். நான் கம்யூனிஸ்ட் கொள்கை சித்தாந்தத்தோடு பணியாற்றி வருகிறேன். சிசிடிவியில், உள்ள வீடியோவில் சம்பவம் நடைபெற்ற நாளன்று தனது சகோதரனின் மீது முருகானந்தம் எச்சில் துப்பியதால் அது குறித்து கேட்பதற்காக நான் சென்றேன்.
நான் அவர்களை ஜாதிய ரீதியாகவும் பேசவில்லை அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கவில்லை பொய்யான குற்றச்சாட்டை வைக்கின்றனர். மேலும், நான் கல்லை எடுத்து எரியவில்லை எனவும், நான் அங்கு சென்றபோது சாவி கீழே விழுந்தது. அதனை எடுப்பதற்காகவே கீழே குனிந்தேன். அதனை அவர்கள் தவறாக சித்தரித்து கூறுகிறார்கள் எனவும், தொடர்ச்சியாக முருகானந்தம் தனது கட்சி கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து எச்சிலை துப்பி கொண்டே இருந்ததால் பல முறை கூறியும் கேட்காமல் எச்சில் துப்பிவந்தார்.
சம்பவ நாளன்று தம்பி மீது எச்சிலை துப்பியது குறித்து கேட்கசென்றபோது என்னை ஆபாசமாக பேசினார். இது தொடர்பாக, ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது முருகானந்தம் நேரடியாக வந்து இனிமேல் இதுபோன்று எச்சிலை துப்பமாட்டேன் என எழுதி கொடுத்து வந்தார்.
ஆனால், இப்போது மீண்டும் தன் மீது அவதூறு பரப்புவதற்காக பாஜகவின் பின்புலத்தோடு புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே, தன் மீது பொய் புகார் அளித்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்து உள்ளேன். எனவே, அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே என் மீது இதுபோன்று பொய்யான புகார்கள் அளிக்கப்படுவதாகவும் அளித்தார்.
எனக்கும் கோழிக்குமாருக்கும் தொடர்பு இல்லை தவறாக புகார் அளிக்கிறார்கள் ஏற்கனவே என் மீது இது போன்று வேறொரு பிரச்சனையை கொண்டுவந்தவர்களே மீண்டும் பின்புலமாக இருந்து தூண்டிவிடுகின்றனர் என்றார். சில நாட்களுக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் காரை நிறுத்தியதற்கே முருகானந்தம் ஆபாசமாக பேசினார் எனவும் தெரிவித்தார்.