எம்ஜிஆர் சிலை அவமதிப்பு… சாணியை பூசிய மர்மநபர்கள் : அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2022, 5:55 pm

சேலம் மாவட்டம்ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டது.

இந்த சிலைக்கு ஆண்டுதோறும் எம்ஜிஆரின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் எம்ஜிஆர் சிலை மீது சாணியை பூசி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன், ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் அதிமுகவினர் திரளானோர் அப்பகுதியில் ஒன்று கூடி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஆத்தூர் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எம்ஜிஆர் சிலையை அவமதித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ