அரசியலுக்கு வர ஆசை.. த.வெ.க.வில் இணைய ஆர்வம்? SECRETஐ உடைக்கும் விஜய் ஆண்டனி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 April 2024, 9:01 pm

அரசியலுக்கு வர ஆசை.. த.வெ.க.வில் இணைய ஆர்வம்? SECRETஐ உடைக்கும் விஜய் ஆண்டனி!!

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்துள்ள ரோமியோ திரைப்படத்தை காண நடிகர் விஜய் ஆண்டனி வருகை தந்தார் அப்போது ரசிகர்களோடு பார்த்துவிட்டு கேக் வெட்டி கொண்டாடினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், படத்தின் வெற்றியை மதுரையில் கொண்டாடுவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும், சின்ன வீடு கட்டுவதற்கு இரண்டு வருடங்கள் ஆகிறது நடிகர் சங்கம் கட்டிடம் உலக தரத்தில் கட்டுவதாக கேள்விப்பட்டேன். பணம் இல்ல போல ரொம்ப கஷ்டப்பட்டு செய்கிறார்கள் என்றார்.

சமீபத்தில் ஓட்டுக்கு பணம் வாங்குவது தொடர்பாக கூறிய விஜய் ஆண்டனி கருத்து சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கேட்டதற்கு.? ஓட்டுக்கு பணம் வாங்குவது சரி என்று சொல்லவில்லை.. வறுமையில் இருப்பவர்களுக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று தான் சொன்னேன்.

சினிமாவில்புதுசாக கலாச்சார மாற்றங்கள் இல்லை நல்ல விஷயங்களை மட்டும் தான் பெரும்பான்மையினும் எடுத்துக் கொள்கிறார்கள்.

அம்மாவிடம் எப்படி அன்பாக இருக்க வேண்டும் என்று பிச்சைக்காரன் படத்தில் கூறியது போல், மனைவியிடம் எப்படி உண்மையாக இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும் கருத்துதான் ரோமியோ படம். நீங்கள் அன்பாக இருப்பீர்களா என செய்தியாளர்களிடம் கேட்டார்.

நான் சாதாரணமாக பேசுவது சர்ச்சையாகப்படுகிறது அந்த சிந்தனைகள் எனக்கு கிடையாது.அரசியல் சாதாரணமான விஷயம் அல்ல. ரஷ்யா – உக்ரேன் போர் பாருங்கள். நமது நாடு எப்படி அமைதியாக இருக்கிறது என்பதை FOREIGN போய் பாருங்கள் தெரியும்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவை அமைதியாக (peaceful) தான் வைத்துக் கொள்கிறார்கள். சுதந்திரத்திற்கு பின்பு போர் நடந்திருக்கிறதா.? சிலர் தவறு செய்திருக்கலாம் அதனால் ஆட்சியை தவறு என சொல்ல முடியாது.

“ரோமியோ படத்தை பாருங்கள் கண்டிப்பாக கண்ணீர் வரும்.”
அரசியல் வருவது தொடர்பான யோசனை இல்லை. ஆனால் இல்லை என்பதும் உறுதியாக சொல்லவில்லை. எனது வேலையை பார்ப்பதற்கு சரியாக இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்கு எதற்கு பயன்பட வேண்டும். வேண்டாம் என்பது இல்லை இப்போதைக்கு யோசனை இல்லை.

இது நல்ல மனிதர் ஹார்ட்ஒர்க்கர் சின்சியரான மனிதர் எனது வாழ்த்துக்கள் என்றார். மழை பிடிக்காத, மனிதன் ஹிட்லர் உள்ளிட்ட படங்கள் தொடர்ச்சியாக வரவுள்ளது.

தொடர்ந்து படத்தை கண்டு கொண்டிருந்தவர்களை சந்தித்த நடிகர் விஜய் ஆண்டனி படம் எவ்வாறு இருந்தது என கேட்டிருந்தார். அப்போது ரசிகர்கள் தல- தளபதிக்கு இசையமையுங்கள் என கேட்டதற்கு கண்டிப்பாக போட்டு விடுவோம் என கூறி சென்றார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…