கோவிலுக்கு பிணமாக வந்த பக்தர்…பாடையில் ஊர்வலம்: வித்தியாசமான நேர்த்திக்கடனை நிறைவேற்றி வழிபாடு…!!

Author: Rajesh
9 April 2022, 5:07 pm

சேலம்: ஜாரி கொண்டலாம்பட்டியில் பக்தர் ஒருவர் பிணம் போல் தேரில் வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தி தன் வேண்டுதலை நிறைவேற்றி கவனத்தை ஈர்த்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஜாரி கொண்டலாம்பட்டியில் மாரியம்மன் காளியம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பக்தர் ஒருவர் வேண்டுதல் காணிக்கை செலுத்துவதற்காக பிணமாக தோற்றமளித்து காட்சி தந்தார்.

இதற்காக கொண்டலாம்பட்டியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பந்தல் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும் இந்த பக்தரின் உடலுக்கு இறந்துபோன சவத்திற்கு செய்கின்ற அனைத்து சடங்குகளும் செய்தனர்.

அத்துடன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை போல் வந்து பங்கு கொண்டனர். இந்நிலையில் தேரில் இறந்து போனதை போல் உள்ள பக்தரின் சவத்தை வைத்து இறுதிஊர்வலமாக தெருத்தெருவாக கொண்டு சென்றனர்.

பின்னர் கொண்டலாம்பட்டியில் உள்ள மயானத்திற்கு சென்று தேரில் எடுத்து வந்த கோழியை மட்டும் புதைத்து விட்டு அங்கிருந்து கோயிலுக்கு புறப்பட்டு வந்து அம்மனை தரிசித்து சென்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1662

    0

    0