சாட்டையால் அடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் : அம்மன் கோவிலில் நடந்த விநோத திருவிழா!
Author: Udayachandran RadhaKrishnan22 May 2024, 2:57 pm
சாட்டையால் அடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் : அம்மன் கோவிலில் நடந்த விநோத திருவிழா!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வரதம்பாளையம் பகுதியில் அருள்மிகு பத்ரகாளியம்மன் மாகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் வருடா வருடம் கம்பம் நடப்பட்டு குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம் அதேபோன்று இந்த ஆண்டு கடந்த ஒன்பதாம் தேதி குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
பின்னர் கோவில் முன்பு 20 அடி உயரத்தில் கம்பம் நடப்பட்டு அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் கம்பம் ஆடி மகிழ்ந்தனர்.
நாளை மறுநாள் குண்டம் திருவிழா நடைபெறும் நிலையில் இன்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோவில் பூசாரி முன்னிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒவ்வொருவராக வந்து சாட்டையில் அடி வாங்கி அம்மனுக்கு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேலும் படிக்க: இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய போதை கும்பல்.. கத்தியை காட்டி மிரட்டல்.. சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது!
இந்த திருவிழாவில் அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.