தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் : திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2022, 2:25 pm

திண்டுக்கல் அருகே பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கம்பிளியம் பட்டி மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழா கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி ( 04.08.22 )இன்று காலை நடைபெற்றது.

இவ்விழாவில் மகாலட்சுமி அம்மனுக்கு அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலுக்கு வந்தடைந்த உடன் கோவில் முன்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அமர்ந்திருந்தனர்.

கோவில் பூசாரி அமர்ந்திருந்த பொது மக்களின் தலையில் தேங்காய் களை உடைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்நிகழ்வில் இக்கிராம மக்கள் மட்டும் இல்லாமல் அருகில் இருக்கும் கிராமம் மற்றும் வெளியூர்களிலிருந்தும் பொதுமக்கள் வந்து தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர்.இந்நிகழ்வு ஏராளமான பொதுமக்களோடு ஆரவாரமாக நடைபெற்றது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!