ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
ஆங்கிலப்புத்தாண்டு தினமான இன்று, அரசு விடுமுறையை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
இதனால் மலைக்கோயில் வெளியே உள்ள பிரகாரங்கள் அனைத்தும் பக்தர்களின் வரிசை நீண்டு காணப்பட்டது. மலைக்கோயில் செல்ல வின்ச், ரோப்கார் நிலையங்களிலும் மலைக்கோயிலில் கட்டண, இலவச தரிசன வரிசைகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சுமார் நான்கு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்டு பின் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மலைக்கோயிலில் உள்ள போகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. அடிவாரம் கிரிவீதி, சன்னதி வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் நிறைந்திருந்தனர்.
மேலும், மலைக்கோயிலில் புத்தாண்டு தினத்தன்று வெளியிடப்படும் சுவாமி படம் பொறிக்கப்பட்ட காலண்டர்களையும் பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.