மருதமலை முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்.. ஆடி கிருத்திகையை முன்னிட்டு அலைமோதிய கூட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2023, 7:41 pm

ஆடி மாதம் வரும் கார்த்திகை நாள் ஆடிக்கிரு த்திகை என அழைக்கப்ப டுகிறது. தட்சிணியான காலத்தில் முதல் மாதமான ஆடி மாதத்தில்தான் சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து 6 தீப்பொறிகள் கிளம்பி அதில் இருந்து ஆறுமுகம் தோன்றி அதனை கார்த்திகை பெண்கள் வளர்த்ததாக ஐதீகம் உள்ளது.

அந்த 6 கார்த்திகை பெண்கள் வானில் நிரந்தர நட்சத்திரமாக மாறினர். இதனால் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு. இந்த பண்டிகையை குறிக்கும் வகையில் ஆடி மாதம் வரும் கார்த்திகை நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெ றும்.

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை கோவிலில் ஆடிக்கிரு த்திகையை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜையுடன் விழா தொடங்கியது.


தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சாமிக்கு 16 வகை திரவிய ங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தங்க கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

ராஜஅலங்கா ரத்தில் சுப்பிரமணிய சாமி பக்தர்களுக்கு அருள்பா லித்தார். முன் மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத ராக உற்சவர் எழுந்தருளினார்.

அவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். இதேபோல மாலை 4.30 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சுப்பிரமணியர் கோவிலை வலம் வருகிறார்.

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு இன்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமியை பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். பக்தர்கள் வருகையால் மலையடிவாரத்தில் வாகன நெரிசலும் காணப்பட்டது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி