கைக் குழந்தைகளை தலைகீழாக தூக்கி நேர்த்திக்கடன் செலுத்தும் தூக்க நேர்ச்சித் திருவிழா : விநோத விழாவில் குவிந்த பக்தர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan24 March 2024, 6:37 pm
கைக் குழந்தைகளை தலைகீழாக தூக்கி நேர்த்திக்கடன் செலுத்தும் தூக்க நேர்ச்சித் திருவிழா : விநோத விழாவில் குவிந்த பக்தர்கள்!!
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே இட்டகவேலி கிராமத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீலகேசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அம்மயிறக்கத் திருவிழாவின் போது நடைபெறும் தூக்க நேர்ச்சை விழா சிறப்பு வாய்ந்ததாகும்.
இதனையொட்டி இக்கோவிலில் தூக்க நேர்ச்சைத் திருவிழா நடைபெற்றது. இந்த தூக்க நேர்ச்சையில் 151 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டது.
இதற்காக மரத்தால் செய்யப்பட்ட இரண்டு தூக்கவில்களில் நேர்ச்சைக்காரர்கள் பச்சிளங்குழந்தைகளை கையில் ஏந்தி அம்மன் எழுந்துள்ளிருக்கும் இடத்தை ஒரு முறை குழந்தையை கையில் ஏந்தி அந்தரங்கத்தில் தொங்கியபடி பவுனி வருவது தூக்க நேர்ச்சை என அழைக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு அம்மன் அருளும், ஆரோக்கியமும் வேண்டி இந்த தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டது. தூக்க நேர்ச்சையின் போது விழா பறம்பில் அம்மா சரணம் தேவி சரணம் என்ற பக்தர்களின் கோஷம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.
முன்னதாக காலையில் சிறப்பு பூஜைகள் எழுந்தருளல்கள் நடைபெற்றன. இதில் குறிப்பாக குத்தியோட்டம், தாலப்பொலி, மஞ்சள்குடம், துலாபாரம், பிடிப்பணம், உருள் நேர்ச்சைகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
தூக்க நேர்ச்சைகளை தொடர்ந்து இரவில் வில்லின் மூட்டில் குருதி நிகழ்ச்சி நடைபெற்றது. தூக்க நேர்ச்சை திருவிழாவில் நேர்ச்சைகள் நடத்தப்படும் குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் குமரி மாவட்டத்திலிருந்தும் கேரளாவிலிருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்