என்னயா பண்ணி வச்சிருக்கீங்க… முருகன் சிலையை பார்த்து புலம்பும் மக்கள்.. சிலையை மாற்றக் கோரிக்கை!!

Author: Babu Lakshmanan
11 May 2024, 8:18 pm

சேலத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட 56 அடி ராஜ முருகன் சிலை குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், முகவடிவதத்தை மாற்ற கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அறுபடை வீடுகள் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் முருகன் கடவுள் குடிகொண்டிருக்கிறார். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் முருகப்பெருமான் கோயில்கள் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில், ஆத்தூர் அருகே இருக்கும் வடசென்னிமலை முருகன் கோயில் மக்களிடையே பெரும் பிரசித்தி பெற்றது.

மேலும் படிக்க: தருமபுரி ஏழை விவசாயியிக்கு டிராக்டரை கொடுத்த ராகவா லாரன்ஸ்… இறுதியில் கொடுத்த அன்பு அட்வைஸ்..!!

இந்த நிலையில், தற்போது சேலம் மாவட்டத்தில் 56 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் முருகன் சிலையின் முகவடிவமைப்பு பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைதளங்களில் முருக பக்தர்கள் பல்வேறு எதிர்க்கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக அழகென்று செல்லுக்கு முருகன் தானே.. ஆனால் இங்கு என்ன முருகனின் முகம் ஒழுங்கின்றி சீரின்றி உள்ளது என கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில், பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க முருகன் சிலையை மறுசீரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!