தாமதமாக வெளியான அறிவிப்பால் தடை நீக்கப்பட்டும் வராத பக்தர்கள் : வெறிச்சோடிய பழனி முருகன் கோவில்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2022, 5:51 pm

திண்டுக்கல் : பழனி கோவிலில் வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட‌ தடை நீக்கப்பட்ட நிலையில் பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டமின்றி‌ வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக இரவு 10மணி முதல் காலை 5மணிவரை இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு தளர்வுகளுடன்‌ ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்துசய்யப்பட்டது. மேலும் இன்று‌முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று பழனி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் இன்று பழனி கோவிலில் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

வெள்ளிக்கிழமையான இன்று பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என நேற்று இரவு தாமதமாக அறிவித்ததால் கோவிலில் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!