“விமர்சனங்களை வென்றவர் “- 20 வருட திரையுலக பயணம்.. நன்றி தெரிவித்து தனுஷ் நெகிழ்ச்சி..!
Author: Rajesh10 May 2022, 7:10 pm
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
முதல் படத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்த தனுஷ் அதைப்பற்றி கவலைப்படாது நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். அதன் பலனாக காதல் கொண்டேன், திருடா திருடி ஆடுகளம், அசுரன், கர்ணன் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து தமிழில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
ஆடுகளம் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் அசுரன் படத்திற்காகவும் தனது இரண்டாவது தேசிய விருதை பெற்றார் தனுஷ்.
இதைதொடர்ந்து சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளரான தனுஷ் பா.பாண்டி படத்தை இயக்கி இயக்குனராகவும் வெற்றி கண்டார்.
இந்நிலையில் தனுஷின் திரைவாழ்க்கையில் இன்று மறக்கமுடியாத நாள். ஏன்னென்றால் மே 10 2002 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ‘துள்ளுவதோ இளமை’ படம் வெளியானது. திரையுலகிற்கு தனுஷ் ஹீரோவாக அடியெடுத்து வைத்த இந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
திரைத்துறையில் 20 வருடம் கடந்து வந்துள்ளேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.. என் ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது.. என்னுடைய பலமே நீங்கள் தான்.! அனைவருக்கும் எனது நன்றி! எண்ணம் போல் வாழ்க்கை..! என அறிக்கை வெளியிட்டுள்ளார்.