தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்குமோ? சூப்பர் ஸ்டார் ரஜினியின் மன நிலைமை எப்படி இருக்குமோ? என பலரும் வருத்தப்பட்டனர்.
இப்படி ஓர் சம்பவம் நடந்த பிறகு, இருவரும் அவரவர் துறைகளில் தங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டனர். தற்போது கிடைத்த தகவலின் படி இருவரும் கணவன்-மனைவியாக இருந்தபோது வசித்துவந்த வீட்டிற்கு அடிக்கடி வருகின்றனராம்.
மேலும், அந்த வீட்டில் மாட்டப்பட்டுள்ள பலகையில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இரு பெயர்களும் இடம் பெற்றுள்ளதாம். அது தற்போது வரை நீக்கப்பட வில்லையாம். மேலும், இருவரும் தனித்தனியே அந்த வீட்டிற்கு வந்து சொல்கின்றனராம்.
இதனை கேட்ட சினிமா துறையினர் மீண்டும் அவர்களுக்குள் பழைய காதல் மலருமா, மீண்டும் இணைந்தால் நல்லதுதான் என்று கூறிவருகின்றனர். விரைவில் நல்லது நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.