பிரபல தொகுப்பாளினிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனுஷ் ரசிகர் : கேப்டன் மில்லர் பட நிகழ்ச்சியில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2024, 2:19 pm

பிரபல தொகுப்பாளினிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனுஷ் ரசிகர் : கேப்டன் மில்லர் பட நிகழ்ச்சியில் அதிர்ச்சி!!

அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சுந்தீப், ஜான் கொக்கன், நாசர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதற்காக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்துகொண்னர்.

அப்போது இந்த படத்தில் சிறுவேடத்தில் நடித்திருந்த தொகுப்பாளினி ஐஸ்வர்யாவும் வந்திருந்தார். ஐஸ்வர்யாவிடம் தனுஷ் ரசிகர் ஒருவர் தவறாக நடந்துகொண்டுள்ளார்.

இதனால் கடுப்பான ஐஸ்வர்யா தன்னிடம் தவறாக நடந்து கொண்ட அந்த நபரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 423

    0

    0